அத்திவரத்தர் மகிமை
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரத்தில் அத்திவரதர் ஆனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு மக்கள் தரிசனம் செய்வதற்காக 48 நாட்கள் எழுந்தருள்வது வழக்கம். 1979 ஆண்டு நடைபெற்றது . 40 ஆண்டுகள் கழித்து ஜூன் 28 2019 வெள்ளிக்கிழமை நள்ளிரவு குளத்தில் இருந்து எடுக்கப்பட்டார். 1-ஜூலை -2019. வசந்த மண்டபத்தில் காட்சி தந்தார்.அதில் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும் அதன் பிறகு 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் மொத்தம் 48 நாட்கள் காட்சிதந்தார். அதன் பிறகு அத்திவரதர் தீர்த்தவாசத்தில் ஆழ்ந்து விடுவார். அதன் பிறகு அத்திவரதர் 2059ல் தான் எழுந்துஅருளுவார் .இவர் வரம் தரும் தெய்வமாக திகழ்பவர். இந்த எம்பெருமானின் கருணையால் எல்லா வளமும் நலமும் சேரும்.
இதுதான் அத்திவரத்தர் வரலாறு.

No comments:
Post a Comment